1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (15:57 IST)

அஜித் 63 ஐ இயக்குவார் விக்னேஷ் சிவன்… இதெல்லாம் நம்புற மாரியா இருக்கு?

அஜித் படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது இறுதிகட்டத்தில் படத்தின் கதையில் அஜித் மற்றும் லைகா ஆகிய இரு தரப்புக்குமே திருப்தி இல்லாததால் விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மை என்றும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது திடீரென ஒரு புதுத் தகவல் பரவி வருகிறது. அதன்படி அஜித்துக்காக அவர் உருவாக்கிய கதை மிகுந்த பொருட்செலவு கொண்டது என்பதாலும், நிறைய முன் தயாரிப்புப் பணிகள் செய்ய இருப்பதாலும், இந்த படத்தில் இருந்து விலகி பின்னர் அவர் அஜித் 63 படத்தை இயக்குவார் என்றும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.