1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (15:35 IST)

விக்னேஷ் சிவனுக்கு நீதிவேண்டும்… டிவிட்டரில் ட்ரண்ட் ஆகும் ஹேஷ்டேக்!

அஜித் 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது இறுதிகட்டத்தில் படத்தின் கதையில் அஜித் மற்றும் லைகா ஆகிய இரு தரப்புக்குமே திருப்தி இல்லாததால் விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மை என்றும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவலை அடுத்து #Justiceforvigneshsivan என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் ட்ரண்ட் செய்து வருகின்றனர் சில ரசிகர்கள்.