மரணம் அடைந்ததாக போலி நாடகம்.. பூனம் பாண்டே மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு..!
மரணமடைந்ததாக நாடகம் ஆடிய நடிகை பூனம் பாண்டே மீது 100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு பதிவு செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பிரபல நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் அவரது மேலாளரே செய்தி வெளியிட்டு இருந்தார். ஆனால் அடுத்த நாளை நான் சாகவில்லை என்றும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதுபோல் நடந்து கொண்டதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கு பூனம் பாண்டேவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பூனம் பாண்டே மற்றும் அவரது கணவருக்கு எதிராக 100 கோடி ரூபாய் கேட்டு அன்சாரி என்பவர் அவதூர் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் இருவரும் மீதும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கு பூனம் பாண்டேவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும் கர்ப்பப்பை புற்றுநோய் குறைத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மரண நாடகம் நடத்தியது சட்டப்படி தவறு என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முடிவு என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran