1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (11:39 IST)

பிணவறையில் அமர்ந்து சாப்பிடும் அமலா பால்… கவனத்தை ஈர்த்த கேடவர் பட போஸ்டர்!

அமலா பால் நடிக்கும் கேடவர் என்ற படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் அவர் புதிதாக நடிக்கும் கேடவர் என்ற படத்தின் வித்தியாசமான போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் பிணக்கூறாய்வு செய்யும் மருத்துவராக நடிக்கிறார்.