வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (10:28 IST)

இனிமேல் பாஸ்ட் அண்ட் பியுரியஸ் படத்தில் நடிக்கப் போவதில்லை… ராக் ஜான்சன் அறிவிப்பு!

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் 8 பாகங்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒன்பதாம் பாகத்தின் ரிலீஸ் செய்யப்பட்டது. மிகப்பெரிய அளவில் அந்த படம் வசூல் செய்து வருகிறது.

இந்த படத்தில் வின் டீசல் மற்றும் ராக் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பின் போதே இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. வின் டீசல் ராக்கிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாக சொல்லப்பட்டது. இதுபற்றி பேசியுள்ள வின் டீசல் ‘அவர் நடித்திருக்கும் கதாபாத்திரம் கடினமானது. அதற்காக நான் ஒரு தயாரிப்பாளராக அவரிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டி இருந்தது. ஒரு படத்தில் உள்ள ஒரு கதாபாத்திரத்துக்கான நடிப்பை பெற நான் எதையும் செய்வேன்.’ எனக் கூறியுள்ளார்.

இந்த மோதலின் காரணமாக இனிமேல் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படங்களில் தான் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ள ட்வைன் ஜான்சன்.