செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 19 மே 2021 (20:22 IST)

பின்னணியில் மோடி படம்: மனைவி, குழந்தையுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர்!

பின்னணியில் மோடி புகைப்படத்துடன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிரபல நடிகர் ஒருவர் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 
 
தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது என்பதும் அதன் பின் சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் தனது பிறந்த நாளை மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடினார் 
 
பின்னணியில் பிரமாண்டமான பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்கே சுரேஷ் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பதும் பாஜகவுக்காக தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பாஜகவின் தீவிர ஆதரவாளரான ஆர்கே சுரேஷ் மோடியின் பிறந்தநாள் புகைப்படத்தை வைத்து பிறந்தநாளை மோடியின் புகைப்படத்தை வைத்து பிறந்தநாள் கொண்டாடியது எந்தவித ஆச்சரியமும் இல்லை என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்