திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 19 ஜனவரி 2019 (10:56 IST)

ரீமா கல்லிங்கல் பிறந்த தினம் இன்று

பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் பிறந்த தினம் இன்று. திருச்சூர் மாவட்டம், அய்யந்தோள் என்ற ஊரில் கே. ஆர். ராஜன், லீனாபாயி தம்பதிக்கு 1984ம் ஆண்டு ஜனவரி 19ம்  தேதி பிறந்தார். 


 
2008ம் ஆண்டு மிஸ் கேரளா அழகி போட்டியில் 2வது இடம் பிடித்தார். அதன்பிறகு நடிகையாக முடிவு செய்த அவர், ரிது என்ற மலையாள படம் மூலம் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் ஆனார். அதன் பிறகு நீலத்தாமரை, சிட்டி ஆப் காட், இந்தியன் ருபி, நித்ரா, 22 பீமேள் கோட்டயம், ஆகஸ்ட் கிளப், ராணி பத்மினி, உள்பட பல்வேறு படங்களில் நடித்தார். தமிழில் கோ, யுவன் யுவதி, மழை வர போகுது ஆகிய படங்களில் நடித்தார். சிறந்த நடிகைக்கான, கேரள அரசின் விருது (2012) வென்றார்.
 
ரீமா கல்லிங்கல்,  2013 நவம்பர் மாதம் மலையாள இயக்குனரான ஆஷிக் அபுவைத் திருமணம் செய்துகொண்டார்.