புதன், 5 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 29 நவம்பர் 2016 (17:24 IST)

குயினாக மாறிய தமன்னா

பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடித்த குயின் படத்தை, தென்னிந்திய மொழிகளில் ரேவதி இயக்கத்தில் நடிகை தமன்னா குயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.


 

 
பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடித்த குயின் பெரிய வெற்றி அடைந்தது. அந்த படம் 2014ஆம் ஆண்டு வெளியானது. அப்போதே அதன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று நான்கு மொழி ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கினார்.
 
தற்போது இந்த ரீமேக் படத்தை ரேவதி இயக்க, சுஹாசினி வசனம் எழுதுகிறார். இதில் கங்கனா ரனவத் கதாபாத்திரத்தில் தமன்னாவை நடிக்க வைப்பது என்று முடிவு செய்துள்ளார்.
 
இந்த படம் முழுக்க பெண்களின் பங்களிப்பில் ஒரு படம் தயாராவது மகிழ்ச்சிதான்.