ரேஷ்மி மேனன் நடிக்கும் பயமா இருக்கு


Caston| Last Modified செவ்வாய், 3 நவம்பர் 2015 (11:54 IST)
இனிது இனிது படத்தில் அறிமுகமான ரேஷ்மி மேனன் ஆரம்பத்தில் கவனிக்கப்படாமல் இருந்தாலும், தனது அழகான தோற்றம் மற்றும் மிகையில்லாத நடிப்பு காரணமாக தமிழ் சினிமாவின் அறியப்படும் நாயகியாகியிருக்கிறார். பாபி சிம்ஹாவும், ரேஷ்மி மேனனும் காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசு, ரேஷ்மியின் வளர்ச்சிக்கு நல்ல உதாரணம்.

 
 
கடைசியாக கிருமி படத்தில் நடித்தவர், பயமா இருக்கு என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் உடன் நடிக்கிறார். புதுமணத் தம்பதிகளுக்குள் பிரச்சனைகள் வர அவர்கள் பெண் சாமியார் கோவை சரளாவை தேடிப் போகிறார்கள். அதன் பிறகு நடக்கும் பிரச்சனைகள்தான் பயமா இருக்கு படத்தின் கதை.
 
படத்தின் பெரும்பாலான காட்சிகளை கேரளாவில் படமாக்கியுள்ளனர். தண்ணீருக்கு மேல், படகில் இரவு நேரத்தில் ரிஸ்க் எடுத்து காட்சிகளை படமாக்கினோம் என்றார், படத்தை இயக்கிவரும் ஜவஹர்.
 
விரைவில் பயமா இருக்கு திரைக்கு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :