1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (14:53 IST)

மதவாத மக்கள் மிகுந்த ஆபத்தானவர்கள்... பிரபல நடிகர் விமர்சனம் !

இந்திய நடிகர்களிலேயே மிகவும் ஸ்டைலிஸ் நடிகர் என்ற பெயரெடுத்தவர் ஜான் ஆபிரகாம். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், மதவாதம் உள்ள மனிதர்கள் தான் ஆபத்தானவர்கள் என தெரிவித்துள்ளார்.
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜான் ஆபிரகாம்  கூறியதாவது :
 
எனது குடும்பம் பல மதங்களைச் சார்ந்தது. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்து என் தந்தை என்னை வளர்க்கவில்லை. 
 
கோவில்,குருத்வாரா, மசூதி என எங்கு வேண்டுமானாலும் சென்று கடவுளை வணங்கலாம். மனிதத்துக்கு சேவை செய்வதுதான் மனத்தின் நோக்கம் எனவே மனிதர்கள் நல்லவர் என்பதை நிரூபிக்க வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வது வழியல்ல என கூறினார்.
 
மேலும், மதம் சார்ந்துள்ள மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இது சர்ச்சை ஆக்குவதற்காக நான் தெரிவிக்கவில்லை; அதனால் அனைவரையும் மதித்து நேசிப்போம் என தெரிவித்துள்ளார்.