ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 28 ஜூன் 2018 (20:43 IST)

“பின்னணி இசை தான் ஹீரோ” - ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

‘பின்னணி இசை தான் ஹீரோ’ எனத் தெரிவித்துள்ளார் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி.
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். அவருடைய தம்பியாக அதர்வா நடித்துள்ளார். பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப், வில்லனாக நடித்துள்ளார்.
 
“இமைக்கா நொடிகள் படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் மிக முக்கியமான படம். தனது சக்திக்கும் மீறி, ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் இந்த மாதிரி  ஒரு பிரமாண்டமான படத்தை தயாரித்திருக்கிறார் ஜெயகுமார். படத்தில் பின்னணி இசை தான் ஹீரோ, இந்த படத்துக்கு நீ தான் இசையமைக்க வேண்டும்  என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்கள்.
 
பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம். பாடல்களை தாண்டி ருத்ரா என்ற தீம் இசை ஹைலைட்டாக இருக்கும். மகிழ் திருமேனி சார் தான் அனுராக் காஷ்யாப் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசுவார் என ஆரம்பத்திலேயே தனக்குள் முடிவு செய்து விட்டார். படத்துக்காக தான் நினைத்ததை செய்து  முடிப்பவர் அஜய்” என்கிறார் ‘ஹிப் ஹாப் தமிழா’ஆதி.