1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (10:18 IST)

விஐபி 2 பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கும் தனுஷ்!

தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி விட்டது. வேலையில்லா பட்டதாரியின் முதல் பாகத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியதாகச் சொல்லப்பட்டாலும், இயக்குனர் வேலையும் சேர்த்துப் பார்த்தவர் தனுஷ்.  பவர் பாண்டியை இயக்குவதற்கான முன் அனுபவமாக வேலையில்லா பட்டதாரி அவருக்கு அமைந்தது.

 
அதன் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா இயக்கி வருகிறார். கதை, வசனம் அனைத்தும் தனுஷ். படத்தில் ஸ்பெஷலாக பாலிவுட்டின் நாயகி கஜோல் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் நடித்தவர்களே இப்படத்திலும் நடிக்கிறார்கள்.  ஃபஸ்ட் லுக்கை அடுத்து படத்தை பற்றி எந்த ஒரு விவரமும் வெளியாகாமல் இருந்தது.

 
தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற தகவல் இன்று வர இருப்பதாக தனுஷே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.