வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2018 (23:59 IST)

நள்ளிரவில் படப்பிடிப்பு: 200 ஆண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு நடிகை

கார்த்திக், கெளதம் கார்த்திக் நடித்து வரும் 'Mr.சந்திரமெளலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இரவுபகலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நள்ளிரவில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது.

கலை இயக்குனர் அமைத்த பிரமாண்டமான பாக்சிங் செட்டில் சுமார் 200 ஆண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு பெண்ணான நடிகை ரெஜினா தைரியமாக நடித்து வருகிறார். அவரின் மன தைரியத்தை படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்,

பொதுவாக இதுபோன்ற படப்பிடிப்பில் நடிகைகள் தங்கள் உறவினர்களையோ அல்லது பாதுகாவலர்களையோ உடன் வைத்து கொள்வது வழக்கம். ஆனால் யாருடைய துணையும் இல்லாமல் படக்குழுவினர் மீது நம்பிக்கை வைத்து ரெஜினா நடித்து வருகிறார். அவரது நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக படக்குழுவினர்களும் அவரிடம் மரியாதையாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் திரு இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைக்க சாம் சி.எஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற 'விக்ரம் வேதா' உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்தவர் என்பது தெரிந்ததே.