லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்தது ஏன்? ரெஜினா அளித்த பதில்!

Last Updated: சனி, 15 ஆகஸ்ட் 2020 (17:11 IST)

பிரபல நடிகையான ரெஜினா பாலிவுட் படம் ஒன்றில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே தைரியமாக லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ‘அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என பலரும் என்னிடம் கேட்டனர். ஆனால் அது பேசப்பட வேண்டிய ஒன்று என்றே நான் நினைக்கிறேன். அந்த படத்துக்கு பின் நிறைய LGBTQ வினர் என்னை அழைத்து அந்த கதாபாத்திரம் தங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறினர்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :