வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (16:29 IST)

பாடகர் எஸ்.பி.பியின் சிகிச்சை குறித்து மருத்துவமனை அறிவிப்பு !

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் எஸ் பி பிக்கு எக்மோ எனப்படும் சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிய நிலையில் சற்று முன் வெளியான மருத்துவமனை அறிக்கையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, இதுகுறித்து அவரது மகன் விளக்கமளித்தார். மேலும் அவரது புகைப்படமும் வெளியானது. இந்நிலையில் அவருக்கு எக்மோ எனப்படும் சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. Extracorporeal Membrane Oxygenation எனப்படும் கருவி மூலமாக ரத்த சுத்திகரிப்பு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த கருவி இதயம் மற்றும் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை உறுதிப்படுத்துகிறது.
இந்நிலையில் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி உடல் நிலை சீராக உள்ளது - எம்ஜிஎம் மருத்துவமனை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, எம்.ஜி.எம் மருத்துவமனை கூறியுள்ளதாவது :
|| திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி உடல் நிலை சீராக உள்ளது - எம்ஜிஎம் மருத்துவமனை பாடகர் எஸ்பிபி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். வெண்டிலேட்டர் உதவியுடன் எஸ்பிபிக்கு தொடர்ந்து சிகிச்சை  அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.