திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (11:37 IST)

கோட் படத்தை மறைமுகமாக தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் படத்தின் அனைத்து மொழிகளுக்குமான சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்னும் தமிழ்நாடு திரையரங்க உரிமை வியாபாரம் ஆகவில்லை என சொல்லப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல்தான் அதை வாங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு நெருக்கமானவர். அதனால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் இவர் மூலமாக மறைமுகமாக கோட் படத்தினை வெளியிட உள்ளதாக ஒரு தகவல் உலாவி வருகிறது.