ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (09:20 IST)

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து விலகிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்… வெளியிடப் போவது யார்?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மறைந்த எழுத்தாளர் கல்கி 1950 களில் எழுதிய பிரபல வெகுஜன நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து நேற்று படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் ஆனது. விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்போவது யார் என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தைக் கைப்பற்றி வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியிடும் முறையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. லைகா நிறுவனமே தமிழகத்தில் வெளியிடும் என சொல்லப்படுகிறது.