திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 24 டிசம்பர் 2022 (17:58 IST)

''வாரிசு '' பட ஆடியோ விழாவில் நட்சத்திரங்களுக்கு 'சிவப்பு கம்பள 'வரவேற்பு!

vaarisu
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  இன்று  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில்  பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ள  இந்த விழாவில், பிரமாண்ட  மேடை தயாராகியுள்ளது.

இந்த விழாவில் மீடியாக்களுக்கு அனுமதி இல்லாத  நிலையில், தயாரிப்பு நிறுவனம்  இந்த விழாவில் கலந்துகொள்ளும் பிரபல நடிகர்கள் வருகையை அப்டேட் செய்து வருகிறது.

இந்த நிலையில்,  பிரபல இந்தி பாடகர்  சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி,   நடன இயக்குனர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். பிரபலங்கள் அனைவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.