செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (11:42 IST)

இதனால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை: சதா

தான் இதுவரை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தை நடிகை சதா கூறியுள்ளார்.

ஜெயம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் சதா. முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடித்தவர், ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்து காணாமல் போனார். தற்போது சதா டார்ச்லைட் என்ற படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் சதா விலை மாது வேடத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் 34 வயதாகியும் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

"எனக்கு ஏற்ற மாதிரி, நான் விரும்பும் வகையிலான நபர்கள் யாரும், என் வாழ்வில் வரவில்லை. அந்த மாதிரி நபரை சந்திக்கும் போது திருமணம் குறித்து யோசிக்கலாம்," என அவர் கூறியுள்ளார்.