புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 7 ஜனவரி 2017 (16:46 IST)

பைரவா படத்தில் விஜய்க்கு ஏன் விக்கு? இதுதான் காரணம்!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. தமிழக ரசிகர்களை போன்றே கேரள ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். 


 
 
பைரவா படத்தில் விஜய்க்கு விக் வைத்துள்ளனர். தளபதி முடியே அழகு அப்படி இருக்கும் போது விக் எதற்கு என விஜய் ரசிகர்களுக்கு லைட்டா வருத்தம் உள்ளது.
 
இதற்கான காரணத்தை படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் தெரிவித்துள்ளார். தெறி படத்தை அடுத்து விஜய் பைரவாவில் நடித்தார். தெறி படத்திற்காக அவர் முடியை ஒட்ட வெட்டியிருந்ததால் விக் வைக்க வேண்டிய நிலை வந்தது.
 
மேலும், சண்டை காட்சிகளில் விஜய் ஸ்டைலாக முடியை கோதி விட வேண்டுமாம். அதற்காக விஜய்க்கு என்று பிரத்யேகமாக இந்த விக்கை செய்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், இதற்கு முன் விஜய்க்கு தலைமுடி உதிர்ந்து அடர்த்தி இல்லாமல் இருந்ததால் விக் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.