1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (16:55 IST)

சிம்பு கொடுக்கவேண்டிய கடனை எல்லாம் ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர்.. பஞ்சாயத்து ஓவர்!

சிம்பு பல தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கவேண்டிய கடன்களால் அவர் மீது ரெட் விதிக்கும் அளவுக்கு பிரச்சனை சென்றது.

நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் தொடங்கியுள்ள புதிய படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கான முதற்கட்ட போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் சிம்புவின் முந்தைய பட விவகாரம் காரணமாக அவருக்கு ரெட் கார்டு விதித்ததால் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிம்பு மீதான ரெட் கார்டை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. இதனால் இன்று முதல் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சனை முடிந்ததற்குக் காரணம் சிம்புவின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் சிம்பு தரவேண்டிய பணத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளாராம். இதன் பின்னர்தான் ரெட் நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.