1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 8 மே 2017 (11:59 IST)

1000 கோடி வசூல்: பாகுபலி பிரபாஸ் ரியாக்சன்!!

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான பாகுபலி 2 உலகம் முழுவதிலும் வெளியான சில நாட்களிலேயே ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது. 


 
 
இந்நிலையில் இது குறித்து பிரபாஸ் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தேசங்களை, மொழிகளைக் கடந்து, பாகுபலி 2  கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்றிக்குத் எனது ரசிகர்களுக்கும், இயக்குனர் ராஜமௌலி அவர்களுக்கும் நன்றி.
 
மகத்தான இந்த தருணத்தில் என்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பில் திளைத்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சிரமம் கொண்டு எடுத்த அத்தனை முயற்சிகளும் படக்காட்சிகளில் சிறப்பாக அமைந்துள்ளது. 
 
மேலும் இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்த பயணத்தில் இணைத்துக்கொண்டு எனக்கொரு முக்கிய பங்களித்து என்னை ஊக்குவித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.