ஜெயம் ரவியின் குதிரையேற்றம்
வனமகன் படத்துக்காக தனது உடல் எடையில் பெருமளவை குறைத்தார் ஜெயம் ரவி. இப்போது மீண்டும் குறைத்த எடையை கூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
சுந்தர் சி.யின் சங்கமித்ராவில் ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கின்றனர். சரித்திரப் படம் என்பதால் கொஞ்சம் உடம்புடன் இருந்தால்தான் சரித்திரகால உடை எடுபடும். அதற்காகவே இந்த உடல் எடை அதிகரிப்பு.
மேலும், குதிரையேற்றம், வாள் சண்டை என்றும் சங்கமித்ராவுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 100 கோடிக்கு மேல் பட்ஜெட் உள்ள படம் என்பதால் இந்த மெனக்கெடல்.
சங்கமித்ராவுக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். நாயகியாக ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 101 வது படமாக இது தயாராகிறது.