1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (07:05 IST)

இயக்குனர் ஆகும் கே ஜி எஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் முதல் பாகம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 2022 ஆம்  ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகி 1000 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கு மூலமாகவே வசூலித்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணங்களில் ஒன்றாக அமைந்தது படத்தின் இசைதான். மிரட்டலான பின்னணி இசையை வழங்கி இருப்பார். இதன் மூலம் அவர் இந்திய அளவில் கவனம் பெற்றார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் இயக்குனர் வேலையைக் கையில் எடுக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 5 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்துக்கு ‘வீர சந்திரஹாசா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.