சூர்யா படத்தின் வாய்ப்பை இழந்த ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் – காரணம் இந்தியன் 2 தானாம்!

Last Modified வியாழன், 4 பிப்ரவரி 2021 (17:20 IST)

நடிகர் சூர்யா நடிக்கும் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர் வாய்ப்பை மறுத்துள்ளாராம் ரத்தினவேல்.

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற ரத்தினவேலை அழைத்துள்ளது படக்குழு. ஆனால் இந்தியன் 2 படத்தில் கமிட்டாகியுள்ள ரத்தினவேல், அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா? எப்போது தொடங்கும் ? எனத் தெரியாமல் இப்போது என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளாராம்.இதில் மேலும் படிக்கவும் :