1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (11:32 IST)

இரண்டு வருடம் கழித்தும் ராட்சசன் படம் செய்த சாதனை – இயக்குனர் அதிரடி முடிவு!

ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதன் இயக்குனர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று விஷ்ணுவிஷால், அமலாபால் நடித்த 'ராட்சசன்'. இந்த படத்தின் வெற்றியை அடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் ஐஎம்டிபி தளத்தில் அதிக புள்ளிகள் பெற்ற தமிழ் படம் என்ற சாதனையை படைத்தது. இதையடுத்து பலரும் இந்த படத்தைப் பாராட்டி வரும் வேளையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என அப்படத்தின் இயக்குனர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.