தெலுங்கு மார்கெட்டை குறிவைத்து நடிகைகளை தேர்வு செய்யும் கார்த்தி!

VM| Last Updated: ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (18:02 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு மார்கெட்டை குறிவைத்து நடிகைகளை தேர்வு செய்வதில் கார்த்தி தெளிவாக உள்ளதாக தெரிகிறது. தேவ் படத்தில் நடித்த ரகுல் பிரீத் சிங், தெலுங்கில் பிரபலமானவர். 
 
இதைத்தொடர்ந்து கார்த்தியின் புதிய படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ரஷ்மிகா ஜோடியாக நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ரெமோ படத்தை இயக்கிவர்  பாக்யராஜ் கண்ணன். இவர் இயக்கும் புதிய படத்தில்தான் கார்த்தி, ரஷ்மிகா ஜோடியாக நடிக்க உள்ளனர்.
 
நடிகர் கார்த்தியின் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு உள்ளது. இதேபோல் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனால் கார்த்தி இரண்டு மொழி ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் கதைகளை தேர்வு செய்து வருகிறார். 
 
அந்த வகையில் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் அவரது படங்களில் நடிகைகள் தேர்வு செய்யப்படுவது தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :