1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:03 IST)

தென்னிந்திய படங்களை தவறாக பேசினேனா?... நடிகை ராஷி கண்ணா அளித்த விளக்கம்!

நடிகை ராஷிகண்ணா தென்னிந்திய படங்களைப் பற்றி தவறாகப் பேசியதாக சமூகவலைதலங்களில் ஒரு தகவல் பரவி வந்தது.

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் "சங்கத் தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் தென்னிந்திய படங்கள் பற்றி தவறான கருத்துகளைக் கூறியதாக சமூகவலைதளங்களில் செய்தி ஒன்று பரவியது. இதனால் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். இந்நிலையில் அந்த செய்தி தவறானது என்று விளக்கம் அளித்துள்ளார். தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘சில புனையப்பட்ட தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. நான் தென்னிந்திய படங்களை பற்றி தவறாக பேசியதாக. நான் இதுபோன்ற செய்திகளை பரப்புபவர்களிடம் இதை நிறுத்துமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நான் நடிக்கும் எல்லா மொழிப் படங்கள் மீதும் நான் உயர்ந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கிறேன்.’ எனக் கூறி விளக்கம் அளித்துள்ளார்.