செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (09:57 IST)

ரெயில்வே ஸ்டேஷனில் பாடி பிரபலமானதும் இவ்வளவு தலைக்கனமா? திட்டிதீர்க்கும் ரசிகர்கள்!

தற்போதைய காலகட்டத்தில் திறமை இருந்தால் எப்படியாது...எதிர்பார்க்காத நேரத்தில் புகழின் உச்சத்திற்கு சென்றுவிடுகின்றர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்கத்தா ரயில்வே டேஷனில் பாடிக்கொண்டு பிச்சை எடுத்த ராணு மண்டால் என்ற பெண் ஒருவரை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்தனர். இதனால் அவர் ஒரே இரவில் புகழின் உச்சத்திற்கு சென்றார். 


 
பின்னர் பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான ஹிமேஷ் ரெஷ்மியா  ராணு மண்டாலுக்கு தனது ஆல்பத்தில் பாட வாய்ப்பு கொடுத்திருந்தார். இதனால் மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார் அந்த பெண். இதற்கிடையில் நடிகர் சல்மான் கான் அந்த பெண்ணிற்கு ரூ. 50 லட்சத்தில் வீடு வாங்கி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது. 
 
இந்நிலையில் தற்போது,  ராணு மண்டால் ஒரு கடையில் இருந்தபோது அங்கிருந்த பெண் ஒருவர் அவரது தோளில் தட்டி கூப்பிட்டு செல்ஃ பி எடுத்துக்கொள்ளலாமா என கேட்டதற்கு அவரை மோசமாக திட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தளங்கில் வெளியாக நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.