புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (18:56 IST)

குணச்சித்திரை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ரங்கம்மாள் பாட்டி காலமானார்!

rangammal patti
சினிமாவில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ரங்கம்மாள் பாட்டி இன்று உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த கி.மு என்ற படத்தில், ஒரு நகைச்சுவை காட்சியில் ரங்கம்மாள் பாட்டி, போறது தான் போற அப்படியே அந்த நாய சூன்னு சொல்லிட்டு போப்பா எனச் சொல்லி வடிவேலுவை நாயிடம் கடிவாங்க வைப்பார்…. இந்த காட்சியில் தத்ரூபமாக    நடித்த அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர், சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் சிறுவயதில் நாடகங்களில் நடித்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த இவர், எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான விவசாயி என்ற படத்தில் அறிமுகம் ஆனார். முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்துள்ள ரங்கம்மாள் பாட்டி, சமீப காலமான உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில்,  அன்னூரில் உள்ளா அவரது வீட்டில் இன்று மரணம் அடைந்தார்.

அவர் இதுவரை 500க்கும் அதிகமான படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.