ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 13 ஜூலை 2017 (21:13 IST)

சமந்தா- நாக சைதன்யா காதலுக்கு வில்லனாக மாற நினைத்த ராணா!!

நடிகை சமந்தாவிற்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் அக்டோபர் மாதம் கோவாவில் திருமணம் நடக்கவுள்ளது.


 
 
நாக சைதன்யா ஒரு தீவிர ரேஸ் கார் மற்றும் பைக் பிரியர். சமீபத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவிற்கு ரேஸ் கார் இன்றை பரிசளித்தார். 
 
இந்நிலையில் நடிகர் ராணா தொகுத்து வரும் நிகழ்ச்சி ஒன்றில் நாக சைதன்யா பங்கேற்றார். அப்போது ராணா நாக சைதன்யாவிடம் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? சமந்தாவா? அல்லது உங்கள் பைக்கா? என்று சாய்ஸ் கொடுத்தார். 
 
இந்த கேள்விக்கு பதிலளிக்க திணறிய சைதன்யா, சமந்தா வீட்டில் எனக்கு மிகவும் முக்கியம். வீட்டிலிருந்து வெளியில் கிளம்பிவிட்டால் சமந்தாவைப்போலவே பைக்கும் மிக முக்கியம். இது போன்ற கேள்விகளை கேட்டு என் வாழ்க்கைக்கு வில்லனாகிவிடாதீர்கள் என நகைச்சுவையாக கூறினார்.