1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (08:35 IST)

இன்னும் இதுபோல என்ன எல்லாம் வச்சிருக்கீங்க… ரம்யா பாண்டியனின் தம்பி கேள்வி!

நடிகை ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக வெளியான வதந்திகளை அவர் மறுத்துள்ளார்.

ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அவரின் தம்பி பரசு பாண்டியன் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை பரசு மறுத்து ‘வேறு என்னென்னெ வதந்திகள் எல்லாம் இது போல வைத்துளீர்கள்’ எனக் கேட்டுள்ளார்.