1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 11 மே 2019 (18:05 IST)

பிக்பாஸ் 3-ல் நான் இல்லை: மறுக்கும் கோலிவுட் ஸ்டார்ஸ்...

பிக்பாஸ் போட்டியாளர்கள் யார் யார் என சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதற்கு மறுப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 
கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சி சீசன் 2 ஆகவும் ஒளிப்பரப்பானது. 
 
இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கியது. கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது என செய்திகள் வெளியாகி வருகிறது.
 
தற்போது பிக்பாஸ் 3-வது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்  போட்டியாளர்கள் பற்றிய செய்திகளும் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் பிக்பாஸ் 3வது சீசனில் பங்குபெற அதிக வாய்ப்புள்ள போட்டியாளர்களின் விவரம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 
டப்ஸ்மாஷ் மிருணாளினி, நடிகை சாந்தினி, நடிகை கஸ்தூரி,   நடிகை விசித்ரா, நடிகர் ராதாரவி, விஜே ரம்யா, நடிகை பூனம் பஜ்வா,   நடிகர் ரமேஷ் திலக், மாடல் பாலாஜி, நடிகர் பிரேம்ஜி, நடிகை மதுமிதா, நடிகர் ஸ்ரீமந்த், நடிகர் சந்தானபாரதி, பாடகர் கிருஷ் ஆகியோரின் பங்பெருவதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், நடிகர் ரமேஷ் திலக் இந்த செய்தியை மறுத்துள்ளார். அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இது வெறும் வதந்தியே என குறிப்பிட்டுள்ளார். அதே போல் நடிகை லைலாவிடம் பிக்பாஸில் கலந்துக்கொள்ள கேட்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் அவரும் இதை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.