மீண்டும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!
நடிகை ரகுல் ப்ரித் சிங் உள்ளிட்ட சில நடிகர் நடிகைகள் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு போதை பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் அவர் சிக்கியதாக எழுந்த செய்திகள் சலசலப்பை உருவாக்கின. இதையடுத்து அவர் அமலாக்கத்துறையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் இப்போது போதைப் பொருள் தொடர்பான பண மோசடி வழக்கில் வரும் 19 ஆம் தேதி ஆஜராக சொல்லி ரகுலுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.