ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 27 ஜூலை 2017 (18:04 IST)

புதுச்சேரியில் ரிக்‌ஷா ஓட்டிய பிரபல நடிகை

தெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங் கார்த்தியுடன் நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் பாடல் காட்சி ஒன்றில் ரிக்‌ஷா ஓட்டி நடித்து இருக்கிறார்.


 

 
தமிழ் அறிமுகமான ரகுல் பிரீத் சிங் படங்கள் வெற்றி பெறாமல் போனதால் தெலுங்கு சினிமா பக்கம் போனார். அங்கு இவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவர் கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
 
இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று புதுச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சி ரகுல் ரிக்‌ஷா ஓட்டுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. முதல் தயங்கிய ரகுல் பின் ரிக்‌ஷா ஓட்ட கற்றுக்கொண்டு நடித்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் ரிக்‌ஷா ஓட்டி அசத்தியுள்ளார்.