புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (17:35 IST)

நாளை மறுநாள் ராஜ்கமல் பிலிம்ஸ் முக்கிய அறிவிப்பு.. ‘இந்தியன் 3’ன்னு சொல்லிடாதீங்க..!

நாளை மறுநாள் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இந்தியன் 3 திரைப்படம் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் மற்றும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக்லைப் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 48 படமும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படமும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் 'இந்த புதன்கிழமை’ என்று மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை மறுநாள் இந்நிறுவனத்தின் தயாரிப்பு உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியன் 3 என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்று ரசிகர்கள் இந்த அறிவிப்பை கலாய்த்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mahendran