செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 24 மே 2017 (15:25 IST)

ராஜீவ் கொலை வழக்கு கதையில் பாகுபலி புகழ் ராணா!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பான கதையை மையமாகக் கொண்டு சில படங்கள் வெளியாகி  உள்ளன. இப்போது மீண்டும் அதே கொலை வழக்கை மையப்படுத்தி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ஒரு படம் தயாராகிறது.

 
‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு நாடு முழுவதும் தெரிந்த பிரபல நடிகராக ராணா மாறி இருக்கிறார். இதில் கதாநாயகனாக  பாகுபலி புகழ் நடிகர் ராணா நடிக்கிறார். அவர் சி.பி.ஐ. அதிகாரியாக இந்த படத்தில் வருகிறார். இது ராஜீவ் கொலை வழக்கை  விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன் வேடம்.
 
ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான கதைதான் இப்படத்தின் கதை. எனவே, நாடு முழுவதும் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்  என்பதால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.