புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 17 மே 2019 (18:04 IST)

ரஜினியின் மகள் நிவேதா தாமஸ் ஆனால், நயன்தாரா அம்மா இல்லை! தர்பார் ட்விஸ்ட்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "தர்பார்"  படத்தின்  சுவாரஸ்யமான தகவல் ஒன்று லீக்காகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடித்துவருகிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. அண்மையில்  இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 
 
சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த புகைப்படத்தில் ரஜினியுடன் நிவேதா தாமஸ் இருந்தார். ரஜினி மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. தற்போது அந்த தகவல் உண்மையே என்பது தெரிய வந்துள்ளது. 
 
அந்தவகையில் நிவேதா ரஜினியின் மகளாக தர்பாரில் நடிக்கிறாராம். ஆனால் நிவேதாவுக்கு அம்மா நயன் இல்லை. தர்பார் படத்தில் ரஜினி  தாதா, போலீஸ் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம்.  எனவே தாதா ரஜினியின் மகள் நிவேதாவாம், போலீஸ் ரஜினியின் ஜோடி நயன்தாராவாம். 
 
நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் கிடைத்தாலும் வழக்கம் போன்று இந்த தகவலையும் ஏ.ஆர். முருகதாஸ் உறுதி செய்யவில்லை. அவர் மறுத்தாலும் தர்பார் படத்தின்  கதை பிட்டு, பிட்டாக கசிந்து வைரலாக பேசப்பட்டு வருகிறது.