கல்லா கட்டாத பேட்ட..? முதல் நாள் கலெக்‌ஷன் விவரம்

Last Updated: வெள்ளி, 11 ஜனவரி 2019 (15:43 IST)
கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள படம் பேட்ட. ரஜினி நடிப்பில் இல்ல ரஜிக்காகவே உருவாகி இருக்கிற படம்தான் பேட்ட. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
பழைய ரஜினி அதாவது விண்டேஜ் ரஜினியை படத்தில் பார்க்க முடிகிறது. இதுவே ரஜினி ரசிகர்களுக்கு பெரிய பூஸ்டாக உள்ளது. இப்படி இருக்க படம் முதல் நாள் கலெக்‌ஷன் எப்படி என்ற விவரம் கிடைத்துள்ளது.  
 
சென்னையில் மட்டும் முதல்நாளில் 170 ஷோக்கள் ஓடின. அனைத்து திரை அரங்குகளிலும் கிட்டத்தட்ட ஹவுஸ் புல்தான். இதில் சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி வரை படம் வசூலித்து உள்ளது. அதேபோல் தமிழகம் முழுவதும் 16 கோடி வசூலை எட்டியுள்ளது.
 
பேட்ட படத்தோடு போட்டியாக விஸ்வாசம் படமும் கலமிறங்கியதால் பேட்ட வசூலில் கொஞ்சம் சறுக்கியுள்ளது. அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் வருவதால் படம் நல்ல கலெக்‌ஷன் அள்ளும் என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :