திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2023 (07:58 IST)

ரஜினி 170 பட டைட்டில் இதுவா?.. லேட்டஸ்ட் தகவல்!

ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. படத்தின் கதைக்களம் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் தமிழ்நாட்டில் ரஜினியை வைத்து ஷூட் நடத்த முடியாது என்பதால் அதே போன்ற நிலவமைப்பு கொண்ட கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காட்சிகளை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன் வில்லன் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்துக்கான ரஜினியின் லுக் டெஸ்ட் சமீபத்தில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்துக்கு ‘வேட்டையன்’ என தலைப்பு வைக்க ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.