செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (12:33 IST)

’ஜிகர்தண்டா டபுள் X' படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி.. வைரல் புகைப்படங்கள்..!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி திரையுலகில் உள்ள பிரபல இயக்குனர்கள் இந்த படத்தை பாராட்டி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்ட நிலையில் அவர் படக்குழுவினர்களை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீட்டிற்கு கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஜே சூர்யா, சந்தோஷ் நாராயணன்,  ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பட குழுவினர் சென்று இருந்த நிலையில் அவர்கள் அனைவருடனும் இணைந்து ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் தலைவர் அவர்களுடன் ஒரு மணி நேரம் இருந்த நிகழ்வை மறக்க முடியாது என்றும் அவருடன் இருந்தது எங்களுக்கு பாசிட்டிவ் வைப் ஆக  இருந்தது என்றும் எங்கள் படக்குழுவினரை அவர் வாழ்த்தியதற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியுடனான சந்திப்பு குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran