வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (14:53 IST)

ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகரை வீட்டுக்கு சென்று சந்தித்த ரஜினிகாந்த்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில்  ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களோடு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள்.

தற்போது ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவின் மங்களூர் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மங்களூருவில் தற்போது இருக்கும் ரஜினிகாந்த் நடிகர் சிவராஜ் குமாரை அவரின் இல்லத்துக்கு சென்று சந்தித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.