காலா படத்தில் ரஜினிக்கு ஜோடி ஈஸ்வரி ராவ்? - புதிய அப்டேட்

Sasikala| Last Updated: சனி, 10 ஜூன் 2017 (15:32 IST)
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘காலா’. படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து  ‘காலா’ குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.

 
 
ரஜினி ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்க இருப்பதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் `காலா’ படத்தில் கரிகாலனின்  மனைவியாக 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஈஸ்வரி ராவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாறாக ஹூமா  குரோஷி, படத்தில் ரஜினியின் தோழியாகவோ அல்லது காதலியாகவோ வரலாம் என்றும் கூறப்படுகிறது. மற்றொரு நாயகியான  அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடிந்து சென்னை திரும்பியுள்ள ரஜினி, ஜுன் 24-ஆம் தேதி மீண்டும்  படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :