1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 18 நவம்பர் 2017 (17:54 IST)

“ரஜினி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” - ஏ.ஆர்.ரஹ்மான்

‘ரஜினி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்’ என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.





25 வருடங்களாக இசை உலகில் சாதனை படைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். கடல் கடந்து, மொழி கடந்து அவருக்கென ஏராளமான இசை ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் எந்த ஊரில் கச்சேரி நடத்தினாலும் கூட்டம் களைகட்டுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிடித்த நடிகர் யார்? “நான் ரஜினியின் தீவிர ரசிகன். இருந்தாலும், கமலையும் பிடிக்கும். ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’, ‘படையப்பா’, ‘சிவாஜி’ படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்போது, அது கலையிலும் பிரதிபலிக்கும். அந்த வகையில் ரஜினி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” எனத் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.