ரூ.300 கோடி கிளப்பில் இணைந்தது ‘ஜெயிலர்’.. பொன்னியின் செல்வன் சாதனையை முறியடிக்குமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியான நிலையில் இந்த படம் நான்கே நாட்களில் 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு கேரளா ஆந்திரா மற்றும் தெலுங்கு மாநிலங்களில் இந்த படம் முதல் நாள் செய்த வசூலை விட நான்காவது நாளில் அதிக வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழில் மிக அதிகமாக வசூல் செய்த படம் பொன்னியின் செல்வன் என்ற நிலையில் அந்த படத்தின் சாதனையை இன்னும் ஒரு சில நாட்களில் ஜெயிலர் படத்தின் வசூல் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிக்கு வசூலில் திருப்திகரமான படம் வெளியாக தான் நிலையில் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய சாதனை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva