1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2017 (05:01 IST)

ரூ.110 கோடிக்கு சாட்டிலைட் உரிமை: ரஜினியின் 2.0 செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் திட்டம்ட்டு வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.



 


இந்நிலையில்  சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தின் வியாபாரத்தை லைகா நிறுவனம் தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நெட்வொர்க் நிறுவனத்திற்கு ரூ.110 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனத்தின் ராஜூ மஹாலிங்கம் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர் ஒரு படத்தின் சாட்டிலைட் உரிமை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது அமீர்கானின் டங்கல் படம் தான். இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை  ரூ.74 கோடிக்கு விற்பனையானது. ரஜினியின் '2.0 அந்த சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது