வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Caston)
Last Modified: செவ்வாய், 23 மே 2017 (13:31 IST)

மும்பைக்கு கிளம்பிய ரஜினி படக்குழு

மும்பைக்கு கிளம்பிய ரஜினி படக்குழு

ரஜினியை வைத்து எடுக்கவிருக்கும் புதிய படத்திற்காக, பா.இரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று மும்பை புறப்பட்டு சென்றுள்ளனர்.


 
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, வருகிற 28-ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மும்பையில் வாழ்ந்த தாதா ஒருவரைப் பற்றிய கதைதான் இது என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அந்த தாதா யார் என்பது தெரியவில்லை.
 
இந்நிலையில், மும்பையில் படமாக்கினால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், மும்பையின் தாராவி பகுதி போன்றே சென்னையிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் செட் போடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், பா.இரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர், நேற்று மும்பை கிளம்பியுள்ளனர்.
 
பொதுவாக, செட் போடுவதைவிட சம்பந்தப்பட்ட இடங்களில் நேரடியாகப் படமாக்கினால் தான் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர் பா.இரஞ்சித். இதனால், யார் சொல்லியும் கேட்காமல், மும்பையிலேயே படமாக்கலாம் என்று விடாப்பிடியாக நின்றிருக்கிறார். வேறு வழியில்லாமல் எல்லோரும் ஓகே சொல்ல, ஒட்டுமொத்த டீமும் இப்போது மும்பையில். ஆனால், 28-ஆம் தேதி தான் ஷூட்டிங் தொடங்குகிறது. அன்று முதல் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் ரஜினி, அடுத்த மாத இறுதியில் தான் சென்னைக்கு வருகிறார். காரணம், கிட்டத்தட்ட ஒரு மாதம் மும்பையிலேயே ஷூட்டிங் வைத்துள்ளாராம் பா.இரஞ்சித்.