தன் மகனுடன் ரஜினியை ஒப்பிட்டு மோசமாக கிண்டலடித்த சௌந்தர்யா! கொந்தளித்த ரசிகர்கள்!

Last Updated: புதன், 26 ஜூன் 2019 (12:34 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா,  ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். 


 
இவர் கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. சௌந்தர்யா - அஸ்வின் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பின்னர் கடந்த பிப்ரவரி 10ம் தேதி விசாகன் வணங்காமுடியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 
 
மறுமண வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவரும் சௌந்தர்யா அவ்வப்போது தனது மகிழ்ச்சியை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வரும் அவர் தற்போது தனது மகனை அப்பா ரஜினிகாந்துடன் ஒப்பிட்டு புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார். 


 
அந்த புகைப்படத்தில் ஒரு புறம் ரஜினிகாந்தும், மற்றொரு புறம் தனது மகன் வேத் இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு மேல், "தனது தாத்தாவை போல பேரன்" என்று பதிவிட்டிருந்தார். தமிழ் சினிமாவில் தற்போது வரை ஸ்டைலிஷான சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினியை தாத்தா என குறிப்பிட்டு பதிவிட்டுள்ள சௌந்தர்யாவின் பதிர்விற்கு கமெண்ட்ஸ் செய்துள்ள ரஜினி ரசிகர்கள்‘எங்கள் தலைவரை, தாத்தா என்று சொல்லாதீர்கள்’ என்றும் ஹலோ சிஸ்டர் தாத்தா லாம் உங்க வீட்ல வச்சிகோங்க ஸ்ட்ராங் மேன் சிஸ்டர். என்றெல்லாம் ரஜினி ரசிகர்கள் சௌந்தர்யாவை  எச்சரித்து வருகின்றனர்.


 இதில் மேலும் படிக்கவும் :