கபாலி கண் திருஷ்டிக்காக கிடா வெட்டிய ரஜினி ரசிகர்கள்

கபாலி கண் திருஷ்டிக்காக கிடா வெட்டிய ரஜினி ரசிகர்கள்


Sugapriya| Last Modified திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (11:21 IST)
கபாலி படம் கண்டமேனிக்கு வசூலித்ததால் ரஜினிக்கு கண் திருஷ்டி பட்டுவிட்டதாகவும், அதைப்போக்க கிடா வெட்டி பூஜை செய்யவிருப்பதாகவும் திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் கூறி வந்தனர். சும்மா பேச்சுக்குதான் சொல்கிறார்கள் என்று பார்த்தால், நேற்று நிஜமாகவே கிடா வெட்டி பூஜை செய்தனர்.

 


ரஜினி ரசிகர்கள் ரஜினிக்காக எதுவும் செய்ய தயாராக இருக்கிறார்கள். கபாலி வெற்றி பெற பூஜை போட்டவர்கள், படம் அமோக வெற்றி பெற்றதால் ரஜினிக்கு கண் திருஷ்டி பட்டுவிட்டதாக கிடா வெட்டி பூஜை நடத்தினர்.

இந்த அற்புத நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தியவர் திருச்சி ரஜினி ரசிகர்மன்ற தலைவர் கர்ணா. ரஜினி ரசிகர்கள் திரளாக இந்த கிடா வெட்டு வைபவத்தில் கலந்து கொண்டனர்.

ஆளை வெட்டாதவரைக்கும் சரிதான்.

 இதில் மேலும் படிக்கவும் :