ரஜினி அழைத்தாலும் நான் படம் இயக்க மாட்டேன்: பிரபல இயக்குநர் பேச்சு!
தமிழ் சினிமாவில் ரஜினியின் கால்ஷீட் கிடைக்காதா? அவருடன் சேர்ந்து ஒரு படமாவது பண்ண மாட்டோமா? என அனைவரும் காத்திருக்கின்றனர். ரஜினியும் தற்போதெல்லாம் தனக்கு பொருந்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவதோடு, இளம் இயக்குனர்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
அதன் வெளிப்பாடாகத்தான் கபாலியை தொடர்ந்து தற்போது காலாவில் வந்து நிற்கின்றது. இந்நிலையில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓனாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினி படம் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அதில் ரஜினி அழைத்தால் நான் படம் இயக்க மாட்டேன். நான் செய்யும் படத்தின் தன்மை வேறு. அவர் நடிக்கும் படத்தின் தன்மை வேறு. நான் சினிமாவைப் பார்க்கும் விதமும், அவர் சினிமாவைப் பார்க்கும் விதமும் வேறு என்று இயக்குநர் மிஷ்கின் கருத்து கூறியுள்ளார்.